×

மதங்கள் அனுமதித்தாலும் அரசு ஊழியர்கள் 2வது திருமணத்துக்கு முன் அனுமதி பெற வேண்டும்: அசாம் அரசு அதிரடி உத்தரவு

கவுகாத்தி: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா கவுகாத்தியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “இரண்டு பேரை திருமணம் செய்து கொண்ட அரசு பணியாளர்கள் இறக்கும்போது அவர்களின் ஓய்வூதியத்துக்கு இரு மனைவிகள் உரிமை கொண்டாடுகின்றனர். அப்போது எழும் பிரச்னைகளுக்கு தீர்வு காண சிரப்பட வேண்டி உள்ளது. இதனால் பல விதவைகள் ஓய்வூதியத்தை இழக்க நேரிடுகிறது. இத்தகைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அசாம் மாநில அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்து நிச்சயம் அரசின் முன்அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது. மதங்கள் அனுமதித்தாலும் 2வது திருமணத்துக்கு அரசின் அனுமதி பெற வேண்டும். அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது அனுமதி தரப்படலாம் அல்லது மறுக்கப்படலாம்” என்று இவ்வாறு கூறினார்.

The post மதங்கள் அனுமதித்தாலும் அரசு ஊழியர்கள் 2வது திருமணத்துக்கு முன் அனுமதி பெற வேண்டும்: அசாம் அரசு அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Govt ,Assam ,Guwahati ,Chief Minister ,Himanta Biswas Sharma ,
× RELATED அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் ஓரிருநாளில் அறிவிப்பு: கார்கே தகவல்